/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகளை வசீகரிக்கும் 'மலபார் மெலஸ்டோம்' மலர்கள்; நாற்று ரூ. 300 வரை விற்பனை

ADDED : ஆக 14, 2025 08:04 PM

குன்னுார்; குன்னுார் சிம்ஸ் பூங்காவில், 'மலபார் மெலஸ்டோம்' மலர்கள் முதல் முறையாக அதிகளவில் பூத்து குலுங்குகிறது.
குன்னுார் சிம்ஸ் பூங்காவில் நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த அரிய வகை மரங்கள் உள்ளன. இங்கு சுற்றுலா பயணிகளை தவிர பல வகையான மலர்கள் நடவு செய்து பராமரித்து வருவதுடன், நாற்றுக்கள் உற்பத்தி செய்து சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பூங்காவில், நடவு செய்யப்பட்டுள்ள, மலபார் மெலஸ்டோம் மலர்கள் பூத்து குலுங்குகிறது. இதன், 5 வெள்ளை சிறிய இதழ்கள், இளஞ்சிவப்பு மொட்டுக்கள், அடர் பச்சை பளபளக்கும் இலைகள் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கிறது.
சிம்ஸ் பூங்கா மேலாளர் லட்சுமணன் கூறுகையில்,''இமாலயன் ரோடோடெண்ட்ரான், என அழைக்கப்படும், மலபார் மெலஸ்டோம் மலர்கள், கேரளாவில் அதிகம் உள்ளது. சிம்ஸ் பூங்காவில் ஓரிரு இடங்களில் மட்டுமே இருந்தது; தற்போது முதல்முறையாக அதிகளவில் பூத்துள்ளது. இதன் நாற்றுகள், 200 தொட்டிகளில் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் முறையாக மலபார் மெலஸ்டோம் மலர் நாற்று, சுற்றுலா பயணிகளுக்கு, 200 முதல் 300 ரூபாய் வரை இவை விற்பனை செய்யப்படுகிறது, மித வெப்ப மண்டல பகுதிகள், மலை அடிவார பகுதிகளில் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப வளரும்,'' என்றார்.