/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மகளிருக்கு கடனுதவி பெற்று தருவதாக ஏமாற்றியவர் கைது
/
மகளிருக்கு கடனுதவி பெற்று தருவதாக ஏமாற்றியவர் கைது
மகளிருக்கு கடனுதவி பெற்று தருவதாக ஏமாற்றியவர் கைது
மகளிருக்கு கடனுதவி பெற்று தருவதாக ஏமாற்றியவர் கைது
ADDED : ஜூன் 16, 2025 09:02 PM

குன்னுார்; குன்னுாரில் அரசு, தனியார் கடன் வாங்கி தருவதாக கூறி, மகளிரை நுாதன முறையில் ஏமாற்றி பணம் பறித்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
குன்னுார் வெலிங்டன் பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் இமானு வேல் ஜேம்ஸ்,24. பாய்ஸ் கம்பெனி பகுதியில், பைனான்ஸ் நடத்தி வந்தார். அரசு, தனியார் கடன்கள் பெற்று தருவதாக கூறி, மகளிர் பலரிடமும், 2 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், ஊட்டி எல்க்ஹில் பகுதியை சேர்ந்த எஸ்தர் என்பவரின் மொபைலில், 'ஆன்லைன்' கடன் தொகை, 50 ஆயிரம் ரூபாயை இவரது கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
ஏமாற்றப்பட்டதை அறிந்து, வெலிங்டன் போலீசில் எஸ்தர் புகார் கொடுத்தார். இதே போல, 20க்கும் மேற்பட்ட பெண்கள், இவர் மீது மொத்தம், 2 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியதாக புகார்கள் கொடுத்தனர். இதன் பேரில், வெலிங்டன் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில், போலீசார், இமானுவேல் ஜோசப்பை கைது செய்து, குன்னுார் சப்- -கோர்ட்டில் ஆஜர்படுத்தி, குன்னுார் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.