ஆட்டோ நிறுத்துவதில் தகராறு கல்லால் தாக்கியவர் கைது
ஆட்டோ நிறுத்துவதில் தகராறு கல்லால் தாக்கியவர் கைது
ADDED : ஆக 23, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
குன்னூர்:
குன்னூரில் ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக கல்லால் தாக்கிய டிரைவரை கைது செய்தனர்.
குன்னூர் மவுண்ட் ரோடு விநாயகர் கோவில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக, மேல் கடைவீதியை சேர்ந்த விஜய், 27 என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ஷாரூக் சையது நவாஸ், 34, என்பவருக்கும் இடையே ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக இருந்தது.
இந்நிலையில், விஜயிடம் தகராறு செய்த ஷாரூக், அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கல்லால் தலையில் பலமாக தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த விஜய், குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். விஜய் அளித்த புகாரின் பேரில், குன்னூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாரூக்கை கைது செய்து குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.
