/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வழுக்கு மரம் ஏறியவர் வழுக்கி விழுந்து காயம்
/
வழுக்கு மரம் ஏறியவர் வழுக்கி விழுந்து காயம்
ADDED : ஜூலை 22, 2025 09:33 PM
குன்னுார்; குன்னுார் சேலாஸ் அருகே கோவில் திருவிழாவில், 60 அடி உயரம் கொண்ட வழுக்கு மரம் ஏறும் போட்டியில், வெற்றி பெற்ற இளைஞர் கால் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
குன்னுார் சேலாஸ் அருகே உள்ள மேல்பாரதி நகர் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா நிறைவு பெற்று மண்டல பூஜை நடந்து வருகிறது. அதில், 42வது நாள் மண்டல பூஜை திருவிழாவில், 60 அடி உயரமுள்ள வழுக்கு மரம் ஏறும் போட்டி நடந்தது. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றதில், குருமூர்த்தி,23, என்ற இளைஞர் மரம் ஏறி போட்டியில் வெற்றி பெற்றார்.
அப்போது திடீரென வழுக்கி கொண்டே வந்து கீழே விழுந்தார். காலில் பலத்த காயமடைந்த இவர் உடனடியாக, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.