/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவில் திருவிழாவில் எட்டி காய் சாப்பிட்டவர் பலி
/
கோவில் திருவிழாவில் எட்டி காய் சாப்பிட்டவர் பலி
ADDED : ஜன 23, 2025 11:17 PM

பாலக்காடு, ; பாலக்காடு அருகே, கோவில் விழாவின் போது, எட்டி மர காய் சாப்பிட்ட வாலிபர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பரதூர் குளமுக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஷைஜு, 43. இவர், வீட்டின் அருகே உள்ள குலதெய்வ கோவிலில் நடக்கும் திருவிழாவில் கலந்து கொள்ள நேற்று காலை சென்றார்.
இந்நிலையில், அங்கு பூஜைகள் நடந்த போது, ஷைஜு திடீரென அருள்வந்து ஆடினார். அப்போது, இவருக்கு ஒரு தட்டில் எட்டி மர காய் உட்பட சில காய்கனிகள் அளித்தனர். பொதுவாக இதை கடித்து துப்ப வேண்டும். ஆனால், ஷைஜு எட்டி மர காயை சாப்பிட்டுள்ளார்.
அதன்பின், வீட்டுக்கு சென்ற ஷைஜுக்கு உடல்நிலை பாதித்தது. இதையடுத்து, உறவினர்கள், பட்டாம்பி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்லும் வழியில், அவர் இறந்தார்.
சம்பவம் குறித்து, பட்டாம்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

