கால்பந்து விளையாட்டின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
கால்பந்து விளையாட்டின் போது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
ADDED : செப் 27, 2026 05:51 PM
பாலக்காடு: மைதானத்தில் நண்பர்களுடன் உற்சாகமாகக் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தவர், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு சேகரிபுரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சேஷாத்ரி, 44. இவர் தனியார் மருந்து உற்பத்தி நிறுவனத்தில், மருத்துவ விற்பனை பிரதிநிதியாக (Medical Representative) பணியாற்றி வந்தார்.
வழக்கம்போல நேற்று காலை, தனது நண்பர்களுடன் முட்டிக்குளங்கரை போலீஸ் முகாம் மைதானத்திற்கு வந்த சேஷாத்ரி, அங்கு நண்பர்களுடன் கால்பந்து விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்.
ஆட்டம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த நிலையில், திடீரென அவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.
உடனடியாக அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
