தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ திட்டில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்

திட்டில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்

திட்டில் இருந்து தவறி விழுந்தவர் மரணம்


ADDED : ஜன 14, 2025 08:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2025 08:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி:

கோத்தகிரி கட்டபெட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாபு,48. இவர் நேற்று முன்தினம் வேலை நிமித்தமாக, கட்டபெட்டு பஜார் பகுதிக்கு சென்றுள்ளார். சாலையோர திட்டில் அமர்ந்து கொண்டிருந்த அவர், திட்டில் இருந்து பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார்.

ஆட்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், மயங்கிய அவர் அங்கேயே படுத்துள்ளார். இதன் இடையே, நேற்று முன்தினம் இரவு மழையில் நனைந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிதுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த பாபுவுக்கு, மனைவி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us