/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வெடி பொருட்களை வீசிவிட்டு தப்பிய நபர்
/
வெடி பொருட்களை வீசிவிட்டு தப்பிய நபர்
ADDED : ஜன 22, 2025 11:05 PM
பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், தடையை மீறி தங்க சுரங்கங்களில் தங்க படிமங்கள் சேகரிக்கும் பணியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் பாறைகளை வெடிக்க செய்வதற்காக, கேரளா மாநிலத்திலிருந்து, டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை கடத்தி வருவது தொடர்கிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பொன்னுார் பஸ் நிறுத்தம் அருகே, போலீசாரை பார்த்ததும் ஒரு நபர் தன் கையில் வைத்திருந்த பையை வீசி எறிந்து விட்டு ஓடி தப்பினார்.
போலீசார் பையை எடுத்து பார்த்த போது அதன் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டெட்டனேட்டர் ஆகிய வெடி மருந்துகள் இருந்தது தெரியவந்தது. வெடி மருந்து பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து தலைமறைமான நபரை தேடி வருகின்றனர்.

