ADDED : செப் 01, 2025 07:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி:
கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் வரவேற்றார். பள்ளி முன்னாள் மாணவர் ராமா கவுடர் தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் பெருமாள் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், 'பள்ளி கல்வித்துறையில் புதிய முன்னெடுப்பாக, இடைநிற்றல், போதை பொருள் தொடர் விழிப்புணர்வு, தனி குடிநீர் இணைப்பு, பள்ளி துாதுவர்கள் இணைப்பு, பள்ளி வளர்ச்சிக்கு அனைவ ரும் முக்கிய பங்கு அளிப்பது,' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், நாட்டுப்புற கலைகள் கணேசன், மேலாண்மை குழு உறுப்பினர்கள் ராஜன், பூபதி உட்பட பலர் பங்கேற் றனர்.