தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தலைமை ஆசிரியர்களுக்கு மேலாண்மை குழு பயிற்சி

 தலைமை ஆசிரியர்களுக்கு மேலாண்மை குழு பயிற்சி

 தலைமை ஆசிரியர்களுக்கு மேலாண்மை குழு பயிற்சி


ADDED : நவ 29, 2025 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு சார்ந்த ஒருநாள் பயிற்சி வகுப்பு நடந்தது.

நீலகிரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில், மாநில திட்ட அலுவலகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட, 88 பள்ளிகளை சார்ந்த தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு சார்ந்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு ஊட்டி ஜோசப் கல்வியியல் கல்லுாரியில் நேற்று நடந்தது.

முதன்மை கல்வி அலுவலர் திருநாவுக்கரசு தலைமை வகித்து பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். மாநில கருத்தாளர்கள் மரியசூசை மற்றும் கார்த்தியாயினி பங்கேற்று பயிற்சி அளித்தனர்.

கல்வி துறை அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது இயங்கி கொண்டிருக்கும் பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகளை வலுப்படுத்தும் விதமாகவும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

இதேபோல், பெற்றோருக்கான செயலியை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிமுகம் செய்யவும், பள்ளி மற்றும் பெற்றோர்களால் பள்ளிக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து பெற்றோர் செயலியின் வாயிலாக உள்ளீடு செய்யப்படும். இவை குறித்து, மாதம் தோறும் நடைபெறும் மாவட்ட கலெக்டர் தலைமையிலான பள்ளி கல்வி துறையின் கூட்டத்தில் தீர்வு காணப்படும்,' என்றனர்.

மாவட்ட கல்வி அலுவலர் நந்தகுமார், கல்வியல் கல்லுாரி தாளாளர் நோயல் ஸ்டீபன், உதவி திட்ட அலுவலர் அர்ஜூனன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் மற்றும் ஊட்டி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள், அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us