/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோவிலில் மண்டல பூஜை; அ.தி.மு.க.,வினர் வழிபாடு
/
கோவிலில் மண்டல பூஜை; அ.தி.மு.க.,வினர் வழிபாடு
ADDED : ஜூன் 26, 2025 09:18 PM
குன்னுார்; குன்னுார் உலிக்கல் பாரதி நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த மண்டல பூஜையில், அ.தி.மு.க., ஆட்சி அமைய சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
குன்னுார் அருகே உலிக்கல், பாரதி நகர் முத்துமாரிணயம்மன் கோவிலில் கும்பாபிஷேக நிறைவையொட்டி, மண்டல பூஜை நடந்து வருகிறது. அதில், உலிக்கல் பேரூராட்சி அ.தி.மு.க., கிளை சார்பில் சிறப்பு பூஜை நடந்தது.
அ.தி.மு.க., ஆட்சி அமைய சிறப்பு வழிபாடுகள் நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜையை பேரூராட்சிகிளை செயலாளர் ராமலிங்கம் துவக்கி வைத்தார். மாவட்ட பிரதிநிதி ரவி ராஜேந்திரன், மேலுார் ஒன்றிய எம்.ஜி.ஆர்., பேரவை செயலாளர் கண்ணன், வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.