ADDED : டிச 09, 2024 09:36 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி; கோத்தகிரி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கடந்த, 20ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த விழாவை ஒட்டி, 48 நாட்கள் மண்டல பூஜை நாள்தோறும் நடந்து வருகிறது. பல்வேறு சமூதாயத்தினர் மற்றும் உபயதாரர்கள் சார்பில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
விழாவின், 19வது நாளான நேற்று அதிகாலை முதல் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக மலர் வழிபாடு நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு இடம்பெற்றது. பூஜையில், பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி; மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.
