/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மார்கழி மாத வழிபாடு: கிராமங்களில் பரவசம்
/
மார்கழி மாத வழிபாடு: கிராமங்களில் பரவசம்
ADDED : ஜன 07, 2024 11:21 PM

ஊட்டி;நீலகிரி கிராமப்புறங்களில் மார்கழி மாத வழிபாடு ஆடல், பாடலுடன் நடந்து வருகிறது.
மார்கழி மாதமானது தேவர்களுக்கு அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமாக உள்ளது. அதன் காரணமாகவே சூரிய உதயத்திற்கு முன்பு, வழிபாடு நடத்தப்படுகிறது. மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் எழுந்து, குளித்துவிட்டு இறைவனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால், வேண்டிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நீலகிரி கோத்தகிரி, குன்னூர், ஊட்டி, கூடலூர், மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக மார்கழி வழிபாடு நடந்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில், பக்தர்கள் அதிகாலை நேரத்தில் அந்தந்த கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்து, பக்தர்கள் பஜனை ஆடல், பாடலுடன் அதிகாலை நேரத்தில் ஒவ்வொரு வீடுகளுக்கு செல்கின்றனர். வாசல் தெளித்து கோலமிட்டு விளக்கேற்றிய வீடுகளில் இருந்து, பூஜை பொருட்களை பெற்று வருகின்றனர்.
சபரிமலைக்கு மாலையிட்டு விரதம் இருக்கும் அய்யப்ப பக்தர்கள், ஹெத்தையம்மன் பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் மார்கழி மாதம் பஜனை ஊர்வலத்தில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மார்கழி மாத வழிபாட்டை ஒட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.