/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாரியம்மன் கோவில் திருவிழா; உபயதாரர்கள் ஊர்வலம்
/
மாரியம்மன் கோவில் திருவிழா; உபயதாரர்கள் ஊர்வலம்
ADDED : நவ 21, 2024 09:04 PM

கோத்தகிரி ; கோத்தகிரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி, நேற்று மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் பூஜை நடந்தது.
கோத்தகிரி கடைவீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இவ்விழாவை ஒட்டி, 48 நாட்கள் மண்டல பூஜை நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும், உபயதாரர்களின் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜை நடக்கிறது. அதன்படி, நேற்று கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர், உபயமாக சிறப்பு பூஜை மற்றும் மலர் அலங்கார வழிபாடு நடந்தது. மார்க்கெட் பகுதியில் இருந்து, தெய்வ வேடமிட்ட பெண் மற்றும் பக்தர்கள் பால் குடத்துடன் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர்.
தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு பூஜை நடந்தது. பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.