/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் தொடரும் மார்க்கெட் கடை பிரச்னை; விரைவில் தீர்வு காண பேச்சு வார்த்தைக்கு பின் மனு
/
குன்னுாரில் தொடரும் மார்க்கெட் கடை பிரச்னை; விரைவில் தீர்வு காண பேச்சு வார்த்தைக்கு பின் மனு
குன்னுாரில் தொடரும் மார்க்கெட் கடை பிரச்னை; விரைவில் தீர்வு காண பேச்சு வார்த்தைக்கு பின் மனு
குன்னுாரில் தொடரும் மார்க்கெட் கடை பிரச்னை; விரைவில் தீர்வு காண பேச்சு வார்த்தைக்கு பின் மனு
ADDED : நவ 15, 2024 09:21 PM

குன்னுார் ; குன்னுார் மார்க்கெட் கடைகளை இடித்து கட்டும் விவகாரத்தில் குழப்பம் நீடித்து வருவதால், வியாபாரிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
குன்னுார் நகராட்சிக்கு உட்பட்ட, 896 கடைகளில் 724 கடைகள் மார்க்கெட்டில் உள்ளன. இந்த கடைகளை இடித்து புதிய கட்டுமான பணிகள் மேற்கொள்ள, மாநில அரசு, 41.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. அதற்கான நடவடிக்கையில் நகராட்சி இறங்கியுள்ளது.
இந்நிலையில், வி.பி., தெரு அருகே, நகராட்சியின் கடையை இடித்து கட்டுவதற்கு ஆளும் கட்சியினருக்கு நகராட்சி அனுமதி கொடுத்துள்ளது. ஆனால், பிற வாடகை கட்டடங்களில் இடிக்காமல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வியாபாரிகள் வலியுறுத்தியும் அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில், குன்னுார் அனைத்து வணிகர்கள் பொது நல சங்கம் சார்பில் வியாபாரிகள்,
கூடுதல் கலெக்டர் சங்கீதா முன்னிலையில், நகராட்சி கமிஷனர் இளம்பரிதி மற்றும் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின், பிரச்னைக்கு தீர்வு காண நேற்று மனு அளிக்கப்பட்டது.
வியாபாரிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில்,'' கடந்த, 2016ல் வாடகை உயர்த்த 'நோட்டீஸ்' வழங்கி இருக்க வேண்டும். ஆனால், 2021ல் அறிவிப்பு கொடுத்து, அரசு வழிகாட்டுதல் இல்லாமல் வாடகை உயர்த்தியதால், வியாபாரிகள் வாழ்வாதரம் காக்க, கடன் வாங்கி, நகைகளை விற்று, ஆண்டிற்கு, 5 கோடி ரூபாய் வாடகை வழங்குகிறோம். தற்போது, 32 கோடி வரை நகராட்சிக்கு வாடகை செலுத்தப்பட்டது. எனினும், இழப்பீடு செய்தவர்களாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது. புதிய கடைகள் கட்டும் திட்டத்தால், வணிகர்கள் பாதிக்காமல் இருக்க, மறு ஆய்வு செய்வது அவசியம். நகராட்சி கவுன்சிலர்கள், வியாபாரிகளின் நலனுக்காக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.
கமிஷனர் இளம்பரிதி கூறுகையில்,''தற்போது, 9 கோடி ரூபாய் வரை நகராட்சி வியாபாரிகள் வாடகை பாக்கி வைத்துள்ளனர். வாடகை பாக்கி இல்லாத வியாபாரிகளின் பெயர் 'பயோ மெட்ரிக்' முறையில் பதிவு செய்யப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படும்,'' என்றார்.