/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'மேக்சி கேப்' ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டம்
/
'மேக்சி கேப்' ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டம்
ADDED : ஜன 09, 2025 10:49 PM

ஊட்டி, ; 'நீலகிரிக்கு வரும் 'கார்ப்பரேட்' நிறுவன வாகனங்களை கண்காணிக்க தனி குழு அமைக்க வேண்டும்,'என, வலியுறுத்தி, ஓட்டுனர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சில கோரிக்கைகளுக்கு தீர்வு காண, சமீபத்தில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
அதில், 'கார்ப்பரேட் நிறுவனங்களின் வாகனங்கள் டிராப் மட்டும் செய்ய வேண்டும்; நீலகிரி மாவட்டத்தில் இருந்து எந்த சுற்றுலா பயணிகளையும் ஏற்றி செல்லக்கூடாது. இதை கண்காணிக்க தனி குழு அமைக்க வேண்டும். மலை மாவட்டத்தில் அனுபவம் இல்லாமல் ஒரு வழி பாதையில் இயங்கும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க, ஊட்டி ஆர்.டி.ஓ ., சதீஷ்குமாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்தகோரிக்கையை நிறைவேற்ற கோரி, ஊட்டியில் மேக்சி கேப் ஓட்டுனர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணியர் உட்பட உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டன.
சங்க செயலாளர் நித்தின் சேகர் கூறுகையில்,''கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி இன்று (நேற்று) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆர்.டி.ஓ., தலைமையில் நடக்கும் பேச்சுவார்த்தையில் உரிய தீர்வு ஏற்படவில்லை எனில், அடுத்த கட்ட போராட்ட குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்,'' என்றார்.

