/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கீழ் கோத்தகிரியில் அதிகபட்ச மழை பதிவு; சோலுார் மட்டத்தில் மின் கம்பம் விழுந்து பாதிப்பு

ADDED : நவ 01, 2024 09:54 PM

கோத்தகிரி ; கீழ் கோத்தகிரியில் நேற்று அதிகப்பட்ச மழை பதிவானது.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், நீர் நிலைகள் நிறைந்து வருவதால், வறட்சி நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என நம்பப்படுகிறது. தவிர, தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்து, மகசூல் உயர்ந்து வருகிறது.
தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறிகள் தோட்டங்களில் தண்ணீர் தேங்கி, பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கோத்தகிரி பகுதியில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. காலை, 11:00 மணி அளவில் மழை ஓரளவு ஓய்ந்தது. மாவட்டத்தில் நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக கீழ் கோத்தகிரியில், 105, மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மேலும், கோடநாட்டில், 29 கோத்தகிரியில், 23 எடப்பள்ளியில் 33 மி.மீ.,மழை பதிவானது.
மழையால், கீழ் கோத்தகிரி அருகே உள்ள சோலுார் மட்டம் -பொம்மன் எஸ்டேட் இடையே மின் கம்பம் விழுந்து, பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி -கோத்தகிரி சாலையில், மைனலை பகுதியில் சாலையோர மரம் விழுந்து, உடனுக்குடன் அகற்றப்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் கடும் குளிரான காலநிலை நிலவுகிறது.