/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்ட கராத்தே போட்டி :மாணவர்களுக்கு பதக்கம்
/
மாவட்ட கராத்தே போட்டி :மாணவர்களுக்கு பதக்கம்
ADDED : பிப் 28, 2024 12:23 AM
குன்னுார்;குன்னுார் ஸ்டான்லி பார்க், 'ஸ்போர்ட்ஸ் அத்தாரட்டி ஆப் தமிழ்நாடு' உள்ளரங்கில், நீலகிரி மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
'தனிநபர் கட்டா, தனிநபர குமித்தே சண்டைபிரிவு, குழு கட்டா,' என, 30 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
நீலகிரி முழுவதிலும் இருந்து, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று தனித்திறமையை வெளிப்படுத்தினர்.
சிறப்பு விருந்தினராக, நீலகிரி மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமையாசிரியை ஜான்சி ரீடா டோனி பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள வழங்கி பேசினார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஏப்., மாதம் 'தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே-டூ' சங்கத்தின் சார்பில் நடக்கும், 40வது மாநில கராத்தே போட்டியில் பங்கேற்க உள்ளனர். சங்க செயலாளர் ரென்சி பழனிவேல் நன்றி கூறினார்.

