/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சி.எஸ்.ஐ., பள்ளியில் மருத்துவ முகாம்
/
சி.எஸ்.ஐ., பள்ளியில் மருத்துவ முகாம்
ADDED : நவ 26, 2024 10:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் சி.எஸ்.ஐ., பள்ளியில் பொது மருத்துவ முகாம் நடந்தது.
குன்னுார் சி.எஸ்.ஐ., நடுநிலை பள்ளியில், 'ஒய்ஸ்மென் கிளப் ஆப் நீலகிரிஸ்; சாந்துார் மெசியா அறக்கட்டளை, கோவை குமரன் மெடிக்கல் சென்டர்,' சார்பில், இதயம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில், ரத்த அழுத்தம், ரத்தத்தின் சர்க்கரை அளவு, இ.சி.ஜி., எக்கோ, தலை வலி, காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளுக்கான பரிசோதனைகள் நடந்தன.
அதில், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து மக்கள் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டனர்.
இலவசமாக மருத்து,மாத்திரைகள் வழங்கப்பட்டன.

