/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்: 103 பேர் பங்கேற்பு
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்: 103 பேர் பங்கேற்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்: 103 பேர் பங்கேற்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்: 103 பேர் பங்கேற்பு
ADDED : அக் 16, 2024 10:06 PM

குன்னுார் : அறிஞர் அண்ணா அரசுமேல்நிலை பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, குன்னுார் வட்டார வள மையம் சார்பில், மாற்றுத்திறன் மாணவ, மாணவியருக்கான இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
முகாமை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவித்திட்ட அலுவலர் அர்ஜூனன், கவுன்சிலர் மன்சூர் துவக்கிவைத்தனர். குன்னுார் வட்டாரத்தில், 18 வயதுக்குஉட்பட்ட, 103 மாணவ, மாணவியர் பங்குபெற்றனர். அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். 13 குழந்தைகளுக்கு அடையாள அட்டைகள், 5 குழந்தைகளுக்கு மருத்துவ உதவி உபகரணங்கள் வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
மருத்துவ சான்றிதழ்வழங்குதல், தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல், தேசிய அடையாள அட்டைக்கான பதிவு, இலவச ரயில் மற்றும் பஸ் பயண சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
எலும்பு மூட்டு, கண், காது, மூக்கு, தொண்டை மருத்துவம் , அன்னப்பிளவு அறுவை சிகிச்சை மற்றும் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.