/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு குன்னுாரில் மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு குன்னுாரில் மருத்துவ முகாம்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு குன்னுாரில் மருத்துவ முகாம்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு குன்னுாரில் மருத்துவ முகாம்
ADDED : நவ 13, 2025 08:18 PM

குன்னுார்: குன்னுாரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
குன்னுாரில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, வட்டார வள மையம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம், அரசு அறிஞர் அண்ணா மேல்நிலை பள்ளியில் நடந்தது. மாவட்ட மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் குப்புராஜ் தலைமை வகித்தார்.
வட்டார வள மைய உதவி திட்ட அலுவலர் அர்ஜுனன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷியாமளா, வட்டார கல்வி அலுவலர் பாண்டியம்மாள், மேற்பார்வையாளர் காயத்திரி முன்னிலை வகித்தனர்.அரசின் உதவி உபகரணங்கள், காப்பீடு திட்ட அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஆர்த்தோ, குழந்தை நல மருத்துவர், மன நல மருத்துவர், பொது நல மருத்துவர் சிகிச்சை அளித்து மருத்துவ ஆலோசனை வழங்கினர். இதில், குன்னுார் தாஜ் குரூப் குழுவினர் நல உதவி செய்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.

