/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுாரில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாம்
/
கூடலுாரில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாம்
கூடலுாரில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாம்
கூடலுாரில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான மருத்துவ முகாம்
ADDED : செப் 29, 2025 09:51 PM

கூடலுார்:
கூடலுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம், ராணுவ மருத்துவமனை சார்பில் நடந்த மருத்துவ முகாமில், முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றனர்.
கூடலுார் அரசு மேல்நிலை பள்ளியில், வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம் மற்றும் தக்ஷன் பாரத் (தென் பிராந்தியம்) வெலிங்டன் ராணுவ மருத்துவமனை சார்பில், முன்னாள் படைவீரர்கள் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் (இ.சி.எச்.எஸ்.,) கீழ், முன்னாள் படை வீரர்கள் மற்றும் சார்புடையவர்களுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை கர்னல் குமார் பராக்கியம், மேஜர் விக்ராந்த், லெப்டினன்ட கர்னல் சுரேஷ்குமார் (ஒய்வு), ஆகியோர் தலைமை வகித்தனர். முகாமை, மூத்த முன்னாள் ராணுவ வீரர் துவக்கி வைத்தார்.
முகாமில், கோவை பி.எஸ்.ஜி., மருத்துவமனையின் பொது மருத்துவம், இருதயவியல், எழும்பியல், நுரையீரல், காது, -மூக்கு, தொண்டை சிறப்பு டாக்டர்கள் மற்றும் வெலிங்டன் ராணுவ மருத்துவமனை ஊழியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். முகாமில், 103 முன்னாள் படை வீரர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
மேலும், முகாமில் முன்னாள் படை வீரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக மெட்ராஸ் ரெஜிமென்ட் மையம் ரெக்கார்ட்ஸ் பிரிவு சார்பில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முன்னாள் படைவீரர்கள் தங்கள் குறைகளை சமர்ப்பித்து தீர்வு கண்டனர்.
முகாமில், முன்னாள் படை வீரர்கள் கூட்டமைப்பு மாநில துணைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட பொதுச் செயலாளர் தாமஸ், கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகா முன்னாள் படைவீரர்கள் நலச்சங்க தலைவர் வாசு, செயலாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.