/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அகவிலைப்படி குறைக்கப்பட்டதாக வந்த சுற்றறிக்கையால் மன உளைச்சல்! கூட்டுறவு தொழிற்சாலை தொழிலாளர்கள் பாதிக்கும் அபாயம்
/
அகவிலைப்படி குறைக்கப்பட்டதாக வந்த சுற்றறிக்கையால் மன உளைச்சல்! கூட்டுறவு தொழிற்சாலை தொழிலாளர்கள் பாதிக்கும் அபாயம்
அகவிலைப்படி குறைக்கப்பட்டதாக வந்த சுற்றறிக்கையால் மன உளைச்சல்! கூட்டுறவு தொழிற்சாலை தொழிலாளர்கள் பாதிக்கும் அபாயம்
அகவிலைப்படி குறைக்கப்பட்டதாக வந்த சுற்றறிக்கையால் மன உளைச்சல்! கூட்டுறவு தொழிற்சாலை தொழிலாளர்கள் பாதிக்கும் அபாயம்
ADDED : செப் 07, 2025 09:03 PM

ஊட்டி: நீலகிரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பெற்று வந்த அகவிலைப்படி குறைக்கப்பட்டதாக வந்த சுற்றறிக்கை அறிவிப்பால் தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
குன்னுார் 'இன்கோ சர்வ் (கூட்டுறவு இணையம்)' கீழ், 'மஞ்சூர், எடக்காடு, கிண்ணக்கொரை , பிக்கட்டி, இத்தலார், நஞ்சநாடு, எப்பநாடு, கரும்பாலம், கட்டபெட்டு, பிதர்காடு, பிராண்டியர், சாலிஸ் பரி,' உள்ளிட்ட, 17 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. 30 ஆயிரம் பேர் அங்கத்தினர்களாக இருந்து கொண்டு தங்களது தேயிலை தோட்டத்தில் பறிக்கும் இலையை அந்தந்த தொழிற்சாலைக்கு வினியோகித்து வருகின்றனர். இலை கொள்முதல், தேயிலை உற்பத்தி உள்ளிட்ட பணிகளில், 3,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
திடீர் அறிவிப்பால் 'அப்செட்' ஆரம்ப காலங்களில் நாள் ஒன்றுக்கு குறைந்த அளவிலான சம்பளம் பெற்று வந்த தொழிலாளர்களுக்கு, படிப்படியாக அடிப்படை சம்பளம், அகவிலைப்படி உயர்ந்தது. 'கடந்த ஜன., மாதத்தில் இருந்து அடிப்படை ஊதியம், 229.50 ரூபாய், அகவிலைப்படி, 354 ரூபாய்,' என, நாள் ஒன்றுக்கு, 583.50 ரூபாய் பெற்று வந்தனர்.
இந்த சம்பளம் தொழிலாளர்கள் மத்தியில் ஓரளவுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில் , தொழிற் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட பதிவாளரிடமிருந்து அந்தந்த கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு, 354 ரூபாயாக இருந்த அகவிலைப்படி, 246 ரூபாயாக குறைக்கப்பட்டு இருப்பதாக சுற்றறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'ஜூலை, 1ம் தேதியில் இருந்து, 246 ரூபாய் அகவிலைப்படிக்கு கூடுதலாக வழங்கப்பட்டு இருப்பின் அந்தத் தொகையை தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்,' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இந்த சுற்றறிக்கையை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சம்பந்தப்பட்ட மேலாண்மை இயக்குனரை அணுகி முறையிட்டனர். மேலதிகாரிகளின் உத்தரவு என மேலாண்மை இயக்குனரும் கை விரித்ததால் தொழிலாளர்கள் செய்வது அறியாமல் மன உளைச்சலில் உள்ளனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், 'மாவட்ட முழுவதும், 17 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், 3,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு, 583.50 ரூபாய் கடந்த ஜன., மாதத்தில் இருந்து பெற்று வருகிறோம். திடீர் அறிவிப்பு மூலம் அகவிலைப்படி, 246 ரூபாயாக குறைக்கப்பட்டதாக சுற்றறிக்கை மூலம் அறிவிப்பு வந்துள்ளது. இதன் வாயிலாக நாள் ஒன்றுக்கு பெற்று வரும் சம்பளத்தில், 108 ரூபாய் குறைந்துள்ளது.
'அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்து அரசிதழில் ஆணை வெளியிடப்பட்டு இருந்தும், தவறுதலாக அகவிலைப்படி வழங்கப்பட்டது,' என, கூறி தினசரி சம்பளத்தில், 108 ரூபாய் குறைந்துள்ளது.
'இது தொடர்பான, தேயிலை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சார்பில் வந்த, சுற்றறிக்கையால் தொழிலாளர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். நாங்கள் கடந்த ஜன., மாதத்தில் இருந்து பெற்று வந்த தொகையை தான் கேட்கிறோம். இது குறித்து, மாநில அரசுக்கு புகார் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.