/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
/
வணிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூலை 17, 2025 09:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுார் அருகே, சேரம்பாடி வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.
இதில், தமிழ்நாடு வணிகர்கள் சங்க துணை தலைவர் தாமஸ் தலைமை வகித்து, வணிகர் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், நுகர்வோர் வியாபாரிகள் நடந்து கொள்ளும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்து பேசினார்.
தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக இஸ்மாயில், செயலாளர் ஜார்ஜ், பொருளாளர் அப்துல் கபூர், நிர்வாகிகளாக அக்பர் அலி, கோபால் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, வணிகர்கள் சங்க உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது.