/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மயக்கும் மாயாறு நீர் வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் ஆர்வம்
/
மயக்கும் மாயாறு நீர் வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் ஆர்வம்
மயக்கும் மாயாறு நீர் வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் ஆர்வம்
மயக்கும் மாயாறு நீர் வீழ்ச்சி; சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ADDED : ஜூலை 30, 2025 08:29 PM
கூடலுார்; மாயார் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கத்தை தொடர்ந்து, முதுமலை எம்.ஜி.ஆர்., டவர் அருகே உள்ள மாயாறு நீர்வீழ்ச்சி சுற்றுலா பயணிகள் மனதை கவர்ந்து வருகிறது.
கூடலுார், முதுமலை பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக, சூரிய வெளிச்சம் இன்றி மழை தொடர்கிறது. இதனால், குளிரான காலநிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழையினால் ஆறுகளில், மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
நீலகிரியில் உற்பத்தியாகி, முதுமலை வழியாக பவானி ஆற்றில் சங்கமிக்கும் மாயாறு ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, முதுமலை எம்.ஜி.ஆர்., டவர் அருகே, பசுமையான வனப்பகுதிக்கு நடுவே, மாயாறு நீர்வீழ்ச்சியில், பெரும் சப்தத்துடன், ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ளது.
சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'கோடை காலத்தில் மாயார் நீர்வீழ்ச்சியில் மிதமான தண்ணீர் காணப்பட்டது. தற்போது, பசுமை சூழ்ந்த வனம் நடுவே நீர்வீழ்ச்சியின் ரம்யமான காட்சி மனதை கவர்ந்துள்ளது,' என்றார்.
வனத்துறையினர் கூறுகையில், 'சுற்றுலா பயணிகள் வனத்துறை வாகனத்தில் இப்பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று, நீர்வீழ்ச்சியை துாரத்தில் இருந்து மட்டும் ரசிக்க அனுமதிக்கப்படுகின்றனர்,'என்றனர்.

