/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிப்பு மீண்டும் ஆட்சியமைக்க உறுதிமொழி
/
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிப்பு மீண்டும் ஆட்சியமைக்க உறுதிமொழி
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிப்பு மீண்டும் ஆட்சியமைக்க உறுதிமொழி
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அனுசரிப்பு மீண்டும் ஆட்சியமைக்க உறுதிமொழி
ADDED : டிச 24, 2024 10:39 PM

கோத்தகிரி; கோத்தகிரியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கோத்தகிரி பேரூராட்சி செயலாளர் நஞ்சு சுப்ரமணி தலைமை வைத்தார்.
மாவட்ட செயலாளர் வினோத், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
வரும் தேர்தலில், 'அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது,' என, உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ., சாந்தி ராமு, ஒன்றிய செயலாளர்கள் குமார், கிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாவட்ட அவைத்தலைவர் மணி, எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணை செயலாளர் தேனாடு லட்சுமணன் உட்பட பலர் பங்கேற்றனர்.