/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் சுற்றுப்புற பகுதியில் மிலாது நபி ஊர்வலம்
/
பந்தலுார் சுற்றுப்புற பகுதியில் மிலாது நபி ஊர்வலம்
பந்தலுார் சுற்றுப்புற பகுதியில் மிலாது நபி ஊர்வலம்
பந்தலுார் சுற்றுப்புற பகுதியில் மிலாது நபி ஊர்வலம்
ADDED : செப் 07, 2025 09:09 PM

பந்தலுார்; பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், மிலாதுநபி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பந்தலுார் அருகே உப்பட்டி பெரிய பள்ளிவாசல் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு நிர்வாகிகள் அப்துல் ரகுமான், ஆலி தலைமை வகித்தனர். பள்ளி வாசலில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து, மதரஸா பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் பங்கேற்ற ஊர்வலம் நடந்தது. அதில், பள்ளிவாசல் மாணவர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
தொடர்ந்து, சமுதாய ஒற்றுமை மற்றும் நபிகள் நாயகத்தின் அறிவார்ந்த தகவல்கள் குறித்து பேசப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி வாசல் கமிட்டி நிர்வாகிகள் ஷாஜி, சிகாப், பாவா, ரெஜீத், தில்ஷாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதே போல், பிதர்காடு,தொண்டியாளம் பள்ளிவாசல்களிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.