/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மினி லாரி -- ஆட்டோ மோதல்: நான்கு பேர் படுகாயம்
/
மினி லாரி -- ஆட்டோ மோதல்: நான்கு பேர் படுகாயம்
ADDED : ஆக 19, 2025 09:09 PM

கூடலுார்:
கூடலுார் ஆமைக்குளம் அருகே, ஆட்டோ, பிக்-அப் வாகனம் மோதிய விபத் தில் ஆட்டோவில் பயணித்த நான்கு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
கூடலுார் தேவர்சோலையிலிருந்து, இஞ்சி ஏற்றிய பிக்-அப் வாகனம் நேற்று முன்தினம், இரவு கேரளா கோட்டக்கல் நோக்கி சென்றது. இரவு, 7:30 மணிக்கு ஆமைக்குளம் அருகே, பிக்-அப் வாகனமும், நாடுகாணியில் இருந்து, மரப்பாலம் நோக்கி வந்த ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணம் செய்த மரப்பாலத்தை சேர்ந்த சூரியகுமார், 21, வசந்தகுமார், 21, சீனக்கொல்லி டேவிட் குமார், 27, அட்டி கொல்லி கிருஷ்ணகாந்த், 27, ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
உள்ளூர் மக்கள் மற்றும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுனர்கள், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கூடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகாந்த், வசந்தகுமார் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும்; டேவிட், சூரியகுமார் ஆகியோரை கோவை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். தேவாலா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

