/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஸ் இயக்க கோரி மினி பஸ் சிறை பிடிப்பு
/
பஸ் இயக்க கோரி மினி பஸ் சிறை பிடிப்பு
ADDED : ஆக 26, 2025 09:36 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே கூலால் வழியாக பஸ் இயக்க கோரி, மினி பஸ்சை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.
பந்தலுார் அருகே கூலால் கிராமம் அமைந்துள்ளது. இதனை ஒட்டி மாடக்குண்டு, மூலப்பிறா, புத்தன் வீடு, குடிமேறி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இவ்வழியாக எருமாடு, அய்யன்கொல்லி, பந்தலுார், கூடலுார்; கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது.
இவ்வழியாக அரசு மற்றும் தனியார் வாகனங்கள் இயக்கப்படாத நிலையில்,மக்கள், 4 கி.மீ., நடந்து, எருமாடு மற்றும் அய்யன்கொல்லி பகுதிகளிலிருந்து, வாகனங்களில் ஏறி பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில், தற்போது பந்தலுாரில் இருந்து கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, கல்லிச்சால், மாதமங்கலம் வழியாக மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. 'இந்த பஸ்சை கல்லிச்சால் சந்திப்பு பகுதியில் இருந்து, கூலால் வழியாக இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தி, நேற்று எருமாடு ஸ்கூல் ஜங்சன் பகுதி யில் மினி பஸ்சை மக்கள் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு, டி.எஸ்.பி., ஜெயபால், மோட்டார் வாகன ஆய்வா ளர் அருண், இன்ஸ்பெக்டர் துரைபாண்டி ஆகியோர், முன்னாள் ஊராட்சி துணை தலைவர் சந்திரபோஸ் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில்,' இவ்வழியாக இயக்க முறையான உரிமம் கிடைக்கும் வரை, தற்காலிகாமாக வேறு மினிபஸ் இயக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால், எருமாடு பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.