/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் மினி பஸ்கள் திடீர் 'ஸ்டிரைக்'; கடும் குளிரில் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள்
/
குன்னுாரில் மினி பஸ்கள் திடீர் 'ஸ்டிரைக்'; கடும் குளிரில் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள்
குன்னுாரில் மினி பஸ்கள் திடீர் 'ஸ்டிரைக்'; கடும் குளிரில் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள்
குன்னுாரில் மினி பஸ்கள் திடீர் 'ஸ்டிரைக்'; கடும் குளிரில் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள்
UPDATED : ஜூலை 23, 2025 08:35 AM
ADDED : ஜூலை 22, 2025 09:30 PM

குன்னுார்; குன்னுார் மவுன்ட் ரோட்டில் கூடுதலாக கிராமப்புற அரசு பஸ்கள் இயக்குவதால், வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி, மினி பஸ் உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
குன்னுாரில், 30 தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, கிராமப்புறத்திற்கு செல்லும் அரசு பஸ்கள், மவுன்ட் ரோட்டின் வழியாக இயக்கப்பட்டு வருகிறது.
இதனால், வாழ்வாதாரம் பாதிப்பு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி, நேற்று மதியம், 2:30 மணியில் இருந்து மினி பஸ்களை நிறுத்தி, உரிமையாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால், பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, டி.எஸ்.பி., ரவி தலைமையில் போலீசார், மினி பஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் பேச்சு நடத்தினர். தொடர்ந்து, 'மக்களின் நலனுக்காக தற்போது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக கூறி, மாலை, 5:30 மணிக்கு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
மினி பஸ் உரிமையாளர் சங்க தலைவர் ரவி கூறுகையில், ''குன்னுார் மவுண்ட் ரோடு வழியாக, 4 டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், பந்துமை பஸ் இயக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களை போல் இல்லாமல், இங்கு கிராம பஸ்களும் 'விடியல் பயணமாக' இயக்கப்படுகிறது.
தற்போது, மவுண்ட் ரோட்டில் கிராமப்புற பஸ்கள் அனைத்தும் இயக்கப்படுவதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பயண கால நேரத்தை முறைப்படுத்தி மினி பஸ்கள் இயக்கப்பட்ட போதும், அரசு பஸ்கள் கால நேரம் பின்பற்றுவதில்லை. டி.எஸ்.பி., நான்கு நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளார். தீர்வு காணாவிட்டால் வரும், 28ம் தேதியிலிருந்து போராட்டம் தொடரும்,'' என்றார்.