/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
டிரைவர் மீது தாக்குதல் மினி பஸ்கள் 'ஸ்டிரைக்'
/
டிரைவர் மீது தாக்குதல் மினி பஸ்கள் 'ஸ்டிரைக்'
ADDED : ஜன 16, 2026 06:07 AM
குன்னுார்: குன்னுாரில் டிரைவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மினி பஸ்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
குன்னுார் ஜெகதளா வழித்தடத்தில் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இரு நாட்களுக்கு முன்பு, மினி பஸ் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கார் ஓவர் டேக் செய்த போது எதிரே நின்றிருந்த வாகனத்தில் கார் மோதியது.
இதற்கு காரணம் மினி பஸ் என கூறி, காரில் வந்தவர்கள், மினி பஸ் டிரைவர் பிரவீன், 27, என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கி உள்ளனர். அருவங்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை கண்டித்தும், சம்பந்தப்பட்ட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், நேற்று முன்தினம், குன்னுாரில் மினி பஸ் டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே அரசு பஸ்கள் இல்லாமல் பயணிகள் அவதிப்பட்டு வரும் நிலையில், மினி பஸ்களும் இயங்காததால் பயணிகள் மிகுந்த பாதிப்பு அடைந்தனர்.
தொடர்ந்து அருவங்காடு போலீசார் விசாரணை நடத்தி, ஜெகதளாவை சேர்ந்த சுரேஷ், ராஜா, சண்முகம், சிவக்குமார், 47 ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து மதியத்திற்கு பிறகு ஒரு சில மினி பஸ்கள் இயக்கப்பட்டன.

