/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பசுந்தேயிலைக்கு குறைந்த பட்ச விலை வேண்டும்; நீலகிரி தேயிலை விவசாய சங்கத்தினர் எதிர்பார்ப்பு
/
பசுந்தேயிலைக்கு குறைந்த பட்ச விலை வேண்டும்; நீலகிரி தேயிலை விவசாய சங்கத்தினர் எதிர்பார்ப்பு
பசுந்தேயிலைக்கு குறைந்த பட்ச விலை வேண்டும்; நீலகிரி தேயிலை விவசாய சங்கத்தினர் எதிர்பார்ப்பு
பசுந்தேயிலைக்கு குறைந்த பட்ச விலை வேண்டும்; நீலகிரி தேயிலை விவசாய சங்கத்தினர் எதிர்பார்ப்பு
ADDED : செப் 16, 2025 09:45 PM
குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில், 65 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் உள்ளனர்.
மாவட்டத்தில், பசுந்தேயிலை பறிப்பது முதல் தொழிற்சாலைக்கு அனுப்புவது வரை, ஒரு கிலோ பசுந்தேயிலை உற்பத்தி செலவு, 25 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. ஆனால், விவசாயிகள் தற்போது, 14 ரூபாய் வரை மட்டுமே விலை பெறுகின்றனர்.
தேர்தலுக்கு முந்தைய காலங்களில் கிலோவுக்கு, 2 மற்றும் 3 ரூபாய் என மானியம் வழங்கப்பட்டது. தற்போது, பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல், சிறு விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநில அரசின் 'இன்கோ' கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு அங்கத்தினர்கள் வழங்கும் பசுந்தேயிலையின் விலையில் ஏற்பட்ட சரிவால், சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது.
தேயிலை ஏலத்தில் போதிய விலை கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில், நீலகிரி மாவட்ட சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் குழுவினர், மத்திய இணை அமைச்சர் முருகன் தலைமையில், நீலகிரி மாவட்ட பா.ஜ., நிர்வாகிகளுடன், டில்லியில் மத்திய வர்த்தக அமைச்சரை சந்தித்துள்ளனர்.
இது தொடர்பாக, நீலகிரி சிறு மற்றும் குறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், டாக்டர் சுவாமிநாதன் குழு அறிக்கையின்படி, பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக, கிலோவிற்கு, 40 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் என சிறு தேயிலை விவசாயிகளின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது, பசுந்தேயிலை விலைக்கும், சில்லறை சந்தையில் தயாரிக்கப்பட்ட தேயிலையின் விலைக்கும் இடையே, பெரிய இடைவெளி உள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்னைகளுக்கு, 'செப்., மாத இறுதிக்குள் விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்கும்,' என, மத்திய அமைச்சர் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது.
விரைவில், இந்த பிரச்னை தீர்க்கப்படும் என நம்புகிறோம், இது தொடர்பாக, மீண்டும் நினைவூட்ட மனுவும் தற்போது அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.