/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 'ஜீரோ டிகிரி'
/
ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 'ஜீரோ டிகிரி'
ADDED : ஜன 03, 2025 09:47 PM

ஊட்டி, ; ஊட்டியில், கடந்த மாதம் இறுதியில் இருந்து அவ்வப்போது உறைபனி தென்பட்டது. இந்நிலையில், நேற்று காலை, ஊட்டி தலைகுந்தா, காந்தள் மற்றும் அவலாஞ்சி, வேலிவியூ, லவ்டேல் போன்ற தாழ்வான பகுதிகளில் கடும் உறை பனி பொழிவு காணப்பட்டது.
இதனால், ஊட்டியில் நேற்று அதிகபட்சம், 19 டிகிரி; நகர பகுதியில், குறைந்தபட்சம், 5 டிகிரி; தாழ்வான பகுதிகளில் 'ஜீரோ' டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகி இருந்தது.
காலை நேரங்களில் கடும் குளிர் நிலவியது. அதிகாலையில் மலை காய்கறி தோட்ட பணிக்கு செல்லும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர். ஊட்டி வந்த சுற்றுலா பயணிகள் குளிரை போக்க, வெம்மை ஆடைகளை வாங்கி அணிந்து சுற்றுலா மையங்களை பார்வையிட்டனர்.