/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போலீஸ் என கூறி வியாபாரியிடம் நகை சுருட்டிய ஆசாமிகள்
/
போலீஸ் என கூறி வியாபாரியிடம் நகை சுருட்டிய ஆசாமிகள்
போலீஸ் என கூறி வியாபாரியிடம் நகை சுருட்டிய ஆசாமிகள்
போலீஸ் என கூறி வியாபாரியிடம் நகை சுருட்டிய ஆசாமிகள்
ADDED : அக் 30, 2025 10:40 PM
பந்தலூர்:  பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியை சேர்ந்தவர் ஆலி 55. இவர் சேரம்பாடி பஜாரில் பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை இவரது கடைக்கு வந்த மூன்று பேர், தாங்கள் சிறப்பு பிரிவு போலீசார் என அறிமுகப்படுத்தி கொண்டனர்.
பின்னர் போதை வஸ்துக்கள் விற்பனை செய்வதாக, ஆதாரங்களுடன் புகார் வந்துள்ளதாகவும், வழக்கு பதிவு செய்தால் சிறை மற்றும் அபராத தொகை செலுத்த வேண்டும் என ஆலியிடம் தெரிவித்தனர்.
தன்னிடம் பணம் இல்லை என்று கூறியஆலி, அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு இவரின் மனைவி கதீஜாவிடமிருந்து இரண்டரை பவுன் தங்க சங்கிலியை வாங்கி அவர்களிடம் கொடுத்ததுடன், வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
பின்னர் இது குறித்து அருகில் உள்ள வியாபாரிகளிடம் கூறியபோது, சந்தேகமடைந்த வியாபாரிகள் சேரம்பாடி போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் சந்திரசீலன் விசாரணை செய்ததில், வந்தவர்கள் போலி ஆசாமிகள் என்பதும், அவர்கள் போலீசார் இல்லை என்பதும் தெரியவந்தது.
இது குறித்து  விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

