UPDATED : ஜூன் 03, 2026 08:22 PM
ADDED : ஜூன் 03, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
கூடலுார்: கூடலுார் பாடந்துறையை சேர்ந்தவர் அப்துல்சமது. இவர் , காலை புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து, ஊட்டி சாலையில் உள்ள ஏ.டி.எம்.,க்கு ஆட்டோவில் சென்றார். ஆட்டோ டிரைவர் சச்சு, அவரை ஏ.டி.எம்., அருகில் இறக்கி விட்டு சிறிது துாரம் வந்தபோது, மொபைல் போன்ற ஆட்டோவில் விட்டு சென்றது தெரிய வந்தது.
மீண்டும் அப்பகுதிக்கு சென்று அவரை, கண்டுபிடித்து, எஸ்.ஐ., பிலிப் சார்லஸ் முன்னிலையில், போனை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். ஆட்டோ டிரைவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
