ADDED : ஜூலை 27, 2025 09:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுார் அருகே, அம்பலமூலா மதுவந்தால் கிராமத்தைச் சேர்ந்தவர்ரவி,61.
இவரை கடந்த, 21-ம் தேதி முதல் காணவில்லை என அம்பலமூலா போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டு தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று அய்யன்கொல்லி அருகே கோட்டைப்பாடி பழங்குடியின கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.  காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சேரம்பாடி மற்றும் அம்பலமூலா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

