/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மிஷனரி ஹில் சாலை சீரமைப்பு: உள்ளூர் மக்கள் நிம்மதி
/
மிஷனரி ஹில் சாலை சீரமைப்பு: உள்ளூர் மக்கள் நிம்மதி
மிஷனரி ஹில் சாலை சீரமைப்பு: உள்ளூர் மக்கள் நிம்மதி
மிஷனரி ஹில் சாலை சீரமைப்பு: உள்ளூர் மக்கள் நிம்மதி
ADDED : மார் 25, 2025 09:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி ; ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட, 26வது வார்டு பகுதியான மிஷனரிஹில் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு, தனியார் காட்டேஜிலிருந்து, முனீஸ்வரர் கோவில் வரை சாலை, 10 ஆண்டுகளாக, குண்டும், குழியுமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். அப்பகுதி கவுன்சிலர் புளோரினா மற்றும் மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கி சாலை சீரமைப்பு பணி நடந்தது. இதனால், மக்கள் நிம்மதியடைந்தனர்.