/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நடமாடும் மருத்துவ சேவை பணி; விண்ணப்பங்கள் வரவேற்பு
/
நடமாடும் மருத்துவ சேவை பணி; விண்ணப்பங்கள் வரவேற்பு
நடமாடும் மருத்துவ சேவை பணி; விண்ணப்பங்கள் வரவேற்பு
நடமாடும் மருத்துவ சேவை பணி; விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : நவ 24, 2024 11:05 PM
ஊட்டி; நீலகிரியில், நடமாடும் மருத்துவ சேவையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'ரெட் கிராஸ் சொசைட்டி' மாவட்ட தலைவர் கோபால் அறிக்கை :
நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில், நடமாடும் மருத்துவ வாகன சேவை வழங்கப்பட உள்ளது. இச்சேவையில் பணியாற்ற விருப்பம் உள்ள மருத்துவர்,செவிலியர், வாகன ஓட்டுனர் மற்றும் அலுவலகப்பணியாளர் பணிக்கு விண்ணம் வரவேற்க படுகிறது. மருத்துவப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், எம்.பி.பி.எஸ்., எம்.டி., பி.டி.எம்.எஸ்., படித்திருக்க வேண்டும் மாதம், 64 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். பிற பணியிடங்களுக்கும் ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள், csrnodnlg@ircstnb.org என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க இறுதி நாள் இம்மாதம், 27ம் தேதி. மேலும், விவரங்களுக்கு, 94426 75508 மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.