/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓவேலியில் 'மொபைல் போன்' சிக்னல் பிரச்னை ரேஷன் பொருட்கள் வாங்க சிரமப்படும் மக்கள்
/
ஓவேலியில் 'மொபைல் போன்' சிக்னல் பிரச்னை ரேஷன் பொருட்கள் வாங்க சிரமப்படும் மக்கள்
ஓவேலியில் 'மொபைல் போன்' சிக்னல் பிரச்னை ரேஷன் பொருட்கள் வாங்க சிரமப்படும் மக்கள்
ஓவேலியில் 'மொபைல் போன்' சிக்னல் பிரச்னை ரேஷன் பொருட்கள் வாங்க சிரமப்படும் மக்கள்
ADDED : மார் 28, 2025 03:31 AM

கூடலுார்: கூடலுார் ஓவேலி ஆரூட்டுப்பாறை பகுதியில், 'மொபைல் போன்' சிக்னல் கிடைக்காததால், ரேஷன் பொருட்கள் வாங்குவதில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
கூடலுார் ஓவேலி ஆரூட்டுப்பாறை பகுதியில், மொபைல் போன் சிக்னல் கிடைப்பதில் பிரச்னை உள்ளது. இங்குள்ள ரேஷன்கடைகளில் பொருள்கள்வழங்க பயன்படுத்தப்படும், கருவியில் கைரேகை வைக்க முடியாத நிலை உள்ளது. ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், ரேஷன் பொருட்கள் வழங்க பயன்படுத்தும் கருவியில், மக்களிடம் கைரேகை பெற்று பொருட்கள் வழங்கு, ஊழியர்களுக்கு அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தினர்.
அதனை ஏற்று, ரேஷன் கடை ஊழியர்கள், ரேஷன் பொருள்கள் வழங்க பயன்படுத்தும் கருவியை, மொபைல் போன் சிக்னல் கிடைக்கும் பகுதிக்கு எடுத்துச் சென்று, பொதுமக்களிடம் கைரேகை பெற்று ரேஷன் பொருள்களை பதிவு செய்து, ரேஷன் கடைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
மக்கள், ஒரு கி.மீ., துாரம் நடந்து சென்று ரேஷன் கடையில் காத்திருந்து, ரேஷன் கடை ஊழியர் வந்தவுடன் பொருட்களை பெற்று செல்கின்றனர். இப்பிரச்னைக்கு, தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மககள் வலியுறுத்தியுள்ளனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'ரேஷன் பொருட்கள் வழங்கும் கருவியில், மக்கள் கைரேகை பதிவு செய்யவில்லை எனில், அவர்களுக்கு தொடர்ந்து பொருள்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.
அதை தவிர்க்கவே, மொபைல் போன் சிக்னல் கிடைக்கும் பகுதியில், கைரேகை பெற்று பொருட்கள் வழங்கப்படுகிறது. அடுத்த மாதத்துக்கு இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தப்படும்,' என்றனர்.