ADDED : ஜன 09, 2026 06:37 AM

பாலக்காடு: மொபைல் போன் திருடிய வழக்கில் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு அரசு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள உணவகத்தில் கடந்த, 4ம் தேதி மேலாளர் கிரிசங்கரின் மொபைல்போன் திருட்டு போனது. இது தொடர்பாக, அவர் பாலக்காடு டவுன் தெற்கு போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீசார், உணவகத்தின் சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி நடத்திய விசாரணையில் 'கேஷ் கவுன்டர்' பகுதியில் வைத்திருந்த மொபைல்போனை ஆளில்லா நேரத்தில் கல்பாத்தி கையாஸ் நகரை சேர்ந்தவர் வித்யா அம்பாள், 33, என்பவர் திருடியது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது குறித்து, இன்ஸ்பெக்டர் விபின்குமார் கூறியதாவது: இவர் பல இடங்களில் திருட்டில் ஈடுபட்டுள்ளார். ஆனால், யாரும் புகார் அளிக்காததால் இவர் தப்பியுள்ளார்.
இப்படி திருடும் மொ பைல் போன்களை கடைகளில் விற்பனை செய்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்து ள்ளார். கிரிசங்கரின் திருட்டு மொபைல்போனை வித்யா அம்பாள் விற்பனை செய்த கடையில் இருந்து பறிமுதல் செய்துள் ளோம். இவ்வாறு, கூறினார்.
