ADDED : பிப் 16, 2024 12:03 AM

அன்னூர்;அன்னூரில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மாதிரி ஓட்டு பதிவு நடந்தது.
லோக்சபா தேர்தல் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் தொடர்பான பணிகள் துவங்கி உள்ளது.
அன்னூர் தாலுகாவில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலர்கள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை, பொதுமக்கள் மாதிரி ஓட்டுப்பதிவு செய்ய, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் வைத்து ஓட்டுப்பதிவு நடத்தி வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் அன்னூரில் சத்தி ரோட்டில் மாதிரி ஓட்டு பதிவு நடந்தது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டு பதிவு செய்தவுடன் அதிலுள்ள சிறிய மானிட்டரில் நாம் தேர்வு செய்த சின்னம் தெரிகிறது. ஆண்கள், பெண்கள் என பலரும் ஆர்வமாக வந்து மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் மாதிரி ஓட்டு பதிவு செய்தனர்.
'21 ஊராட்சிகளிலும் மாதிரி ஓட்டுப்பதிவு நடைபெற்றது,' என தேர்தல் பிரிவு துணை தாசில்தார் தெய்வ பாண்டியம்மாள் தெரிவித்தார்.