/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறைக்கு நவீன உபகரணங்கள்! கூடுதலாக தீ தடுப்பு பணியாளர்கள் நியமிக்க அரசு உத்தரவு
/
கோடையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறைக்கு நவீன உபகரணங்கள்! கூடுதலாக தீ தடுப்பு பணியாளர்கள் நியமிக்க அரசு உத்தரவு
கோடையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறைக்கு நவீன உபகரணங்கள்! கூடுதலாக தீ தடுப்பு பணியாளர்கள் நியமிக்க அரசு உத்தரவு
கோடையில் காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறைக்கு நவீன உபகரணங்கள்! கூடுதலாக தீ தடுப்பு பணியாளர்கள் நியமிக்க அரசு உத்தரவு
ADDED : மார் 16, 2025 11:41 PM

கூடலுார் வன கோட்டத்தில், கூடலுார், ஓவேலி, ஜீன்பூல், தேவாலா, சேரம்பாடி, பிதர்காடு ஆகிய வன சரகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதிகள், தமிழகம், கேரளா, கர்நாடகா வனப்பகுதிகளை ஒட்டி அமைந்து உள்ளதுடன், மூன்று மாநிலங்களுக்கு செல்லும் சாலைகளும் இப்பகுதியில் உள்ளன.
இதனால், கோடை காலங்களில் காட்டுத் தீயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கிராமங்களை ஒட்டிய வனப்பகுதிகளில், சமூக விரோதிகள் தீ வைப்பதன் வாயிலாக வனங்கள் தீயில் கருகி பாதிக்கப்படுகிறது. வனப்பகுதிகளை எரிப்பதால் அறிய வகை தாவரங்கள் மற்றும் மரங்கள் அழிவதுடன், பறவைகள், விலங்குகள், ஊர்வன போன்றவையும் அழிந்து, இவைகளின் இருப்பிடம் அழிக்கப்படுகிறது. இதனால், வன விலங்குகள் கிராமங்களை ஒட்டிய தோட்டங்கள் மற்றும் கிராம பகுதிகளில் புகுந்து அவற்றை தங்கள் வாழ்விடங்களாக மாற்றி கொள்கின்றன. சமூக விரோதிகள் வனப்பகுதிகளை எரிப்பதால், கார்பனை தேக்கி வைத்துக் கொள்ள மரங்கள் மற்றும் தாவரங்கள் இல்லாததால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மக்களுக்கும், வனவிலங்குகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், கூடலுார் வன கோட்டத்தில் காட்டு தீ பரவாமல் தடுக்கும் வகையில், தீ தடுப்பு கோடுகள் அமைப்பது, வனத் துறையினர் வாயிலாக, 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், தீ ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் தீயணைப்பான், ஆக்சிஜன் கிட், டிரெக்கிங் பேக், ஸ்ட்ரெச்சர், டார்ச் லைட், முதலுதவி பெட்டிகள், எரிவாயு வடிகட்டி உருண்டைகள், கட்டர், கத்திகள் போன்றவை அந்தந்த வனச்சரங்களில் வாங்கி வைக்கப்பட்டு உள்ளது.
கோடை மழை குறைந்த பின், மீண்டும் வெப்பம் துவங்கும் நேரத்தில், வனப்பகுதிகளில் தீ ஏற்பட்டால், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று அதனை கட்டுப்படுத்தும் வகையில், தற்போது உள்ள வனப் பணியாளர்களுடன், கூடுதலாக, 22 தீ தடுப்பு காவலர்களும் பணியில் உள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'தற்போதுள்ள உபகரணங்களை கொண்டு, காட்டு தீ பரவலை கட்டுப்படுத்த இயலும். எனினும், பொதுமக்கள் வனங்களையும், வன விலங்குகளையும் பாதுகாக்க முன் வரவேண்டும். இதனை மீறும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.