/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத அறுவை சிகிச்சை; இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத அறுவை சிகிச்சை; இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத அறுவை சிகிச்சை; இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத அறுவை சிகிச்சை; இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : டிச 26, 2024 10:02 PM
ஊட்டி; ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல அறுவை சிகிச்சைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரியில் அரசு மருத்துவமனை மற்றும் அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல அறுவை சிகிச்சை முகாமானது இம்மாதம், 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
முகாமில் கலந்து கொண்டு ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை பெற்று கொல்பவருக்கு அரசு ஊக்க தொகையாக, 1100 ரூபாய், ஊக்குவிப்போருக்கு 200 ரூபாயும் வழங்கப்படுகிறது.
இந்த முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், ஆண்களுக்கான 'நவீன வாசக்டமி- 2024' விழிப்புணர்வு ரதத்தை கலெக்டர் லட்சுமி பவ்யா துவக்கி வைத்தார்.
அதிகாரிகள் கூறுகையில், 'மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் குடும்ப நல இயக்ககத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்று அல்லது இரண்டு குழந்தைக்குப் பின்பு நிரந்தரமான கருத்தடை அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் அடிக்கடி பிள்ளை பெறுவதில் இருந்து தாய்மார்களை விடுவித்து அவர்களின் வாழ்க்கை தரம் உயர்வடைய குடும்ப நலத்துறை பங்காற்றும்,' என்றனர்.
நிகழ்ச்சியில் , ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் ராஜசேகரன், ஊட்டி ஆர்.டி.ஓ., சதீஷ்குமார், குடும்ப நலத்துறை பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.