/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஸ்வச் பாரத் மிஷன்' திட்டத்தில் நவீன கழிப்பிடங்கள்; ஊட்டியில் சுகாதார பிரச்னைக்கு தீர்வு

ADDED : செப் 19, 2024 09:37 PM

ஊட்டி : ஊட்டி நகராட்சியில், 10 இடங்களில், ' ஸ்வச் பாரத் மிஷன்' திட்டத்தில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.
ஊட்டி சர்வ தேச சுற்றுலா தலமாக இருப்பதால் ஆண்டுக்கு, 35 லட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.
நகரில் பஸ் ஸ்டாண்ட், ஏ.டி.சி., சேரிங்கிராஸ், பிங்கர்போஸ்ட், தலைக்குந்தா, தாவரவியல் பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலா பயணியர் பயன்படுத்தும் பகுதியாக உள்ளன.
நகராட்சி கட்டுப்பாட்டில் இருந்த கழிப்பிடங்கள் அனைத்தும் போதிய பராமரிப்பின்றி காணப்பட்டதால் சுற்றுலா பயணியர் முகம் சுளிக்கும் அவலநிலை ஏற்பட்டது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் 'ஸ்வச் பாரத் மிஷன்' - 2.0 திட்டத்தின் கீழ், பழைய கழிப்பிடங்களை இடித்து புதிய கழிப்பிடங்கள் கட்ட மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பழைய கட்டடங்கள் அனைத்தும் இடிக்கப்பட்டன.
இத்திட்டத்தில், ஒரு கழிப்பிடம், 19.28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படுகிறது. நகரின், 10 இடங்களில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிடங்கள் கட்டும் பணி துவங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில், பிங்கர்போஸ்ட் பகுதியில் கட்டப்பட்டு வரும் பணிகளை, கலெக்டர் லட்சுமி பவ்யா நேரில் சென்று ஆய்வு செய்தார். பணிகள் குறித்து நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவிடம் கேட்டறிந்தார். 'கட்டப்படும் நவீன கழிப்பிடங்களில் தண்ணீர் வசதியுடன், பராமரித்து கொள்ளும் வகையில் கவனம் செலுத்த வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.