/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மொண்டிபாளையம் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
/
மொண்டிபாளையம் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
மொண்டிபாளையம் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
மொண்டிபாளையம் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : ஜன 19, 2024 12:23 AM

அன்னுார்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று கொடியேற்றம் நடந்தது.
மேலத்திருப்பதி என்று அழைக்கப்படும் மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் 57ம் ஆண்டு தேர் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. திருமுனை நகர சோதனை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது.
நேற்று காலை, காப்பு கட்டுதல் நடந்தது. வேள்வி பூஜையுடன் கொடியேற்றம் நடந்தது. வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 21ம் தேதி வரை தினமும் காலை 8:00 மணிக்கும், இரவு 8:00 மணிக்கும், பெருமாள் பல்வேறு வாகனங்களில் தேரோடும் வீதியில் உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
22ம் தேதி காலை 10:00 மணிக்கு, அம்மன் அழைப்பு நிகழ்ச்சி, திருக்கல்யாண உற்சவம், இரவு புஷ்பக விமானத்தில், திருவீதி உலா நடக்கின்றன.
வரும் 23ம் தேதி இரவு யானை வாகனத்தில் திருவீதி உலா நடக்கிறது. 24ம் தேதி காலை 11:00 மணிக்கு தேரோட்டம் துவங்கி நடக்கிறது. முக்கிய பிரமுகர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் வடம் பிடித்து தேர் இழுக்கின்றனர்.
25ம் தேதி இரவு பரிவேட்டை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள்மேற்கொண்டு வருகின்றனர்.

