/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வியாபாரியிடம் பணம் அபேஸ் ; 'டிப்டாப்' ஆசாமி 'எஸ்கேப்'
/
வியாபாரியிடம் பணம் அபேஸ் ; 'டிப்டாப்' ஆசாமி 'எஸ்கேப்'
வியாபாரியிடம் பணம் அபேஸ் ; 'டிப்டாப்' ஆசாமி 'எஸ்கேப்'
வியாபாரியிடம் பணம் அபேஸ் ; 'டிப்டாப்' ஆசாமி 'எஸ்கேப்'
ADDED : ஜூன் 29, 2025 11:06 PM
குன்னுார்; குன்னுார் அருகே அருவங்காடு பகுதியில் கோழிக்கடை வியாபாரி ஜெயக்குமார். நேற்று முன்தினம் இவர் கடைக்கு வந்த டிப்டாப் ஆசாமி, '20 கோழிகள் மற்றும் ஆறு டிரே முட்டைகள் வேண்டும்,' என, கூறியுள்ளார். தொடர்ந்து அருகில் உள்ள மளிகை கடையில், 7,500 ரூபாய் மதிப்பில் பொருட்களை கட்டி வைக்க கூறியுள்ளார்.
பிறகு கோழிக்கடையில், 'டிரைவர் கீழே வாகனத்தில் இருப்பதாகவும், 'ஆன்லைன் ஜிபே' வேலை செய்வதில்லை,' எனக்கூறி, 2,500 ரூபாய் வாங்கி கொண்டு சென்று உள்ளார். கோழிகளை வெட்ட ஆரம்பித்த நிலையில், அருகில் உள்ள கடைக்காரரிடமும் பணம் கேட்டது தெரிய வந்த தால் உஷார் அடைந்த வியாபாரி ஓடி சென்று தேடி பார்த்துள்ளார். ஆனால், அந்த 'டிப்டாப்' ஆசாமி ஓட்டம் பிடித்து விட்டார். அங்குள்ள 'சிசிடிவி'கேமரா பதிவுகள் வைத்து அருவங்காடு போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
போலீசார் கூறுகையில்,' இது போன்ற மோசடி நபர்கள் இப்பகுதிகளில் நடமாடி வருகின்றனர். வியாபாரிகள் உஷாராக இருக்க வேண்டும். சந்தேகப்படும் நபர்கள் வந்தால், தகவல் தர வேண்டும்,' என்றனர்.