/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குரங்கு வாயில் கட்டி; சிகிச்சை அளிக்க வலியுறுத்தல்
/
குரங்கு வாயில் கட்டி; சிகிச்சை அளிக்க வலியுறுத்தல்
குரங்கு வாயில் கட்டி; சிகிச்சை அளிக்க வலியுறுத்தல்
குரங்கு வாயில் கட்டி; சிகிச்சை அளிக்க வலியுறுத்தல்
ADDED : ஜன 22, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் 'டென்ட்ஹில்'பகுதியில் உலா வரும் குரங்கு ஒன்றின் வாய் நுனியில் கட்டி ஏற்பட்டு உணவு உட்கொள்வதில் சிரமத்துடன் சென்று வருகிறது. இங்குள்ள தனியார் பள்ளி மற்றும் வனத்துறை அலுவலக பகுதிகளில் உலா வருகிறது.
இது தொடர்பாக வனத்துறைக்கு தன்னார்வலர்கள் புகார் தெரிவித்த நிலையில் கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், 'குரங்கை பிடித்து சிகிச்சை அளிப்பதுடன், வேறு ஏதேனும் நோய் உள்ளதா என்பது குறித்தும் கால்நடை டாக்டர்கள் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும்,' என்றனர்.