/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுாரை குளிர்வித்த பருவ மழை; காலநிலை மாற்றத்தால் மக்கள் பாதிப்பு

ADDED : நவ 05, 2024 08:53 PM
பந்தலுார் ; பந்தலுார் பகுதியில் பருவமழை, தீவிரம் காட்டியதுடன் பல்வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து குறைந்து வந்த மழையின் அளவு, கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.
'காலையில் வெயில், மாலையில் மழை, இரவில் வெப்பம்,' என, காலநிலைகள், மாறி மாறி வருவதால் மக்களின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களாக அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மறுபுறம் தொடர் மழையின் காரணமாக பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகள் பசுமைக்கு மாறி உள்ளது. இதனை கேரள சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.
மருத்துவர்கள் கூறுகையில், 'இங்கு மாறி, மாறி வரும் காலநிலையில் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகின்றனர். மக்கள் இந்த காலநிலையில் தண்ணீரை காய்ச்சி வைத்து குடிக்க வேண்டும். இதனால், பல நோய்களை தடுக்க முடியும்,' என்றனர்.