/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாசனை பொருட்களில் அதிக அலங்காரம்; கூடலுார் கண்காட்சியில் மக்கள் எதிர்பார்ப்பு
/
வாசனை பொருட்களில் அதிக அலங்காரம்; கூடலுார் கண்காட்சியில் மக்கள் எதிர்பார்ப்பு
வாசனை பொருட்களில் அதிக அலங்காரம்; கூடலுார் கண்காட்சியில் மக்கள் எதிர்பார்ப்பு
வாசனை பொருட்களில் அதிக அலங்காரம்; கூடலுார் கண்காட்சியில் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 05, 2025 10:13 PM
கூடலுார்; கூடலுாரில் நடக்கும் வாசனை திரவிய கண்காட்சியில், வாசனை திரவிய பொருட்களால் உருவான உருவங்களை அதிகளவில் இடம்பெற செய்ய வலியுறுத்தப்பட்டு உள்ளது.
கோத்தகிரியில் நடந்து முடிந்த காய்கறி கண்காட்சியை தொடர்ந்து, கூடலுாரில், 9ம் முதல் 11ம் தேதி வரை வாசனை திரவிய கண்காட்சி நடக்கிறது.
தொடர்ந்து, 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஊட்டியில் ரோஜா கண்காட்சி, 16 முதல் 21 ஆம் தேதி வரை மலர் கண்காட்சியும், 23ம் முதல் 25ஆம் தேதி வரை குன்னுாரில் பழ கண்காட்சியும், காட்டேரி பூங்காவில் மே 31, ஜூன் 1 தேதிகளில் மலைபயிர் கண்காட்சி நடக்கிறது.
இந்நிலையில், கூடலுாரில் நடைபெற உள்ள வாசனை திரவிய கண்காட்சியில் வழக்கம்போல தோட்டக்கலை துறையினர் மட்டுமே வாசனை திரவிய பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உருவங்களை கண்காட்சியில் வைக்க தயாராகி வருகின்றனர்.
மற்ற அரசு துறையினர், வழக்கம் போல் தங்கள் துறையில் உள்ள பொருட்களை மட்டுமே கண்காட்சியில் வைக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால், கண்காட்சிக்கு வரும் மக்கள், ஏமாற்றம் அடையும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க, வாசனை திரவியங்களை கொண்டு உருவாக்கப்பட்ட பல உருவங்கள் அதிக அளவில் கண்காட்சியில் இடம்பெற செய்ய மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'வாசனை திரவிய கண்காட்சியில், கடந்த பல ஆண்டுகளாக, தோட்டக்கலை துறை தவிர வேறு யாரும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.
நடப்பு ஆண்டு, இந்த நிலையை மாற்றி வாசனை திரவிய கண்காட்சியில், வாசனை திரவிய பொருட்களால் பல தனித்துவமான பொருட்கள், அலங்காரங்களை அதிக அளவில் இடம்பெற செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.