/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உணவு ஊட்டிய தாய் பறவை; மகிழ்ந்த வன உயிரின ஆர்வலர்கள்
/
உணவு ஊட்டிய தாய் பறவை; மகிழ்ந்த வன உயிரின ஆர்வலர்கள்
உணவு ஊட்டிய தாய் பறவை; மகிழ்ந்த வன உயிரின ஆர்வலர்கள்
உணவு ஊட்டிய தாய் பறவை; மகிழ்ந்த வன உயிரின ஆர்வலர்கள்
ADDED : பிப் 14, 2024 11:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார் : பந்தலுாரில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில், தனது குஞ்சுகளுக்கு உணவு ஊட்டிய தாய் பறவையின் பாசத்தை கண்டு வன உயிரின ஆர்வலர்கள் மகிழ்ந்தனர்.
பந்தலுார் பஜார் பகுதியில் வீட்டு தோட்டத்தில், பூச்செடியில் கூடு கட்டிய 'ரெட் விஸ்கார்டு' புல்புல் பறவை, தனது குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதை, தலையாய பணியாக கொண்டுள்ளது.
இதற்கு எவ்வித இடையூறு ஏற்படாமல் இருக்கும் வகையில், வீட்டின் உரிமையாளர் மேரி நாள்தோறும் கண்காணித்து பாதுகாத்து வருகிறார். இந்நிலையில், தனது குஞ்சுகளுக்கு தாய் பறவை உணவு ஊட்டிய காட்சி, அங்கு வந்த வன உயிரின ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.